Title of the document

 தேர்தல் வாக்குறுதியை நம்பி தவிக்கும் ஆசிரியர்கள் வேதனை!! 

27 மாதமாக கோரிக்கை  பரிசீலிக்கப்படும் என்பதா?

181-வது திமுக தேர்தல் வாக்குறுதியை நம்பி தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை:

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற திமுக 505 வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

பழைய பென்ஷன், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் போன்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை கொடுத்து நம்பி கொண்டு இருந்தவர்கள் இந்த 27 மாத காலதாமதம் காரணமாக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இப்போது வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் அனைத்துமே திமுக வாக்குறுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கேட்கப்படும்போது, விரைவில் பரிசீலிக்கபடும் என அமைச்சர்கள் பதில் இருக்கின்றது.

முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தொடர்ந்து சொல்லி தாமதம் செய்யப்படுவது இனி வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிகிறது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கூறியது :

பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் பணிநிரந்தரம் செய்வேன் என சொன்னவர் தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளதால் 12ஆயிரம் குடும்பங்கள் தவிக்கின்றோம்.

முதல்வரை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் முதல்வர் நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நாங்கள் கொடுக்கின்றோம்.

ஆனால் அந்த மனுக்களும் என்ன ஆனது என தெரியவில்லை.

சட்டமன்றத்தில் பல கட்சி உறுப்பினர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய பேசி வருகிறார்கள்.

பல கட்சி தலைவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த கலந்துரையாடல் 18-9-2021 மற்றும் 22-6-2023 கூட்டத்திலும் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தினோம்.

விரைவில் பரிசீலிபோம், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற பள்ளிக்கல்வி அமைச்சர் பதில் பகுதிநேர ஆசிரியர்களை வேதனையில் தள்ளுகிறது.

பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் செய்தோம்.

இப்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பு TNSE - JACTO வில் இணைந்து போராடி வருகிறோம்.

சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதி கொடுத்தது.

அதில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்பட பழைய பென்ஷன் போன்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு திமுக முனைப்பு காட்டி வருகிறது.

முன்பு திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால் உள்ளதால் பல தரப்பிலும் எதிர்ப்பு உள்ளதை முதல்வர் சரி செய்ய வேண்டும்.

இது முதல்வர் ஸ்டாலின் கையில் தான் உள்ளது.

எனவே இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்பட பழைய பென்ஷன் போன்ற திமுக வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்.


************************


S.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post