Title of the document

தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை அறிவிப்பு - எந்தெந்த இடங்களில் தெரியுமா ? 

தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • உதகை, கூடலூர், பந்தலூர், கூடலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று, இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.


கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை விரைந்தது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post