Title of the document
"2009&TET சம வேலைக்கு சம ஊதியம்" மூன்று நபர் ஊதிய குழுவை விரைந்து அறிவிக்க கோரி மூன்று கட்ட போராட்டம் அறிவிப்பு!!



 *திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311 இல், 20 ஆயிரம்      இடைநிலை ஆசிரியர்களுக்கு “ சம வேலைக்கு”  “சம  ஊதியம்” வழங்குதல் சார்பாக 3  நபர் ஊதிய குழு அறிக்கையை பெற்று ஊதிய முரண்பாட்டை நிறைவேற்ற மூன்றுகட்டமாக போராட்டம்.*                       
                                   *01.06.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 13 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 01.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ₹8370 என்றும் அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ₹5200 என்றும் “ஒரே பணி” “ஒரே கல்வித்தகுதி” “ஒரே பதவி” என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும்    ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்க வேண்டும் என்பதை புறம்தள்ளி இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதை களையக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.*

 *திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311 ல்  20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கப்படும் என கோரிக்கையை இடம் பெறசெய்தார்கள்.*
                                            *புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு  முடிவடைந்த நிலையில் தேர்தல் அறிக்கையை குறிப்பிடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை விரைந்து செய்ய வேண்டும் என கடந்த 2022 டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.*

*அப்போது ‌300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் 01.01.2023 இந்த புத்தாண்டின் முதல் அறிவிப்பாக  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் அதனோடு சேர்த்து போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.*
                           
*அந்த மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை தொடக்க கல்வித் துறையில் உள்ள ஐந்து ஆசிரியர் சங்கங்களை மட்டுமே அழைத்து கருத்துக்களை கேட்டுள்ளது.இன்னும் கருத்து கேட்க வேண்டியது இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரிய இயக்கங்கள் உள்ளன.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் குழுவின் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது,ஆனால் தற்போது பல மாதங்கள் ஆகியும் அறிக்கையை விரைந்து கொடுப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் தெரியவில்லை.*
                              
 *2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள்.பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறோம் ஆகவே இனிய காலதாமதப்படுத்தாது முதல்வர் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்ற கோரி*

*காணொளி வாயிலாக நடைபெற்ற SSTA மாநில செயற்குழு கூட்டத்தில் மூன்று கட்ட போராட்டம் SSTA சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.*


*முதல் கட்டமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் 2009-க்கு  பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் ஊதியத்தை வழங்க கோரி “போராட்ட ஆயத்த மாநாடு” நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.*


*இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் முதல்  செப்டம்பர் -27 வரை கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு செல்வது எனவும்,
அதன் பின்னரும் அரசு செவிமடுக்கவில்லை எனில் மாணவர் நலன் பாதிக்கப்படாமல் செப்டம்பர் மாதம் முதல் பருவ விடுமுறையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை  நடத்துவது என்றும்  கோரிக்கை முடியும் வரை போராட்டத்தில் அமர்ந்த பின் இம்முறை கைவிடுவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.*                             

தகவல் பகிர்வு 

*ஜே.ராபர்ட்*

*மாநில பொதுச்செயலாளர்*

*SSTA-இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post