Title of the document

ஜூன் மாதத்தில் ஆசிரியர்களுக்கு CRC நடைபெறும் தேதி அறிவிப்பு - Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்

ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறு / வட்டார வளமைய கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் - தொடர்பாக.

(Teacher Professional Development)

2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி 30.05.2023 மற்றும் 31.05.2023 அன்று நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி 08.06.2023 மற்றும் 09.06.2023 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது.

 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 10.06.2023 அன்று நடைபெற இருந்த குறு / வட்டார வளமைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அக்கூட்டம் மீண்டும் 17.06.2023 அன்று நடைபெறவுள்ளதால், அனைத்து மாவட்டக் கருத்தாளர்களும் மற்றும் 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அனைத்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post