Teacher's Transfer Counselling News - ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
*மாறுதல் கலந்தாய்வு தடை - நீதிமன்றம் உத்தரவு விளக்கம்*
1.அனைத்து கல்வித் தகுதிகளுடன் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர் இருக்கும் பொழுது, TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான மாநில அளவிலான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதால் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 23 - இன் படி பணியில் தொடரவும் பதவி உயர்வுக்கும் TET தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயம். மேலும் அதன் அடிப்படையிலேயே தகுதி பெற்றவர்களுக்கு பதிவு உயர்வு வழங்கப்பட வேண்டுமென மனுதாரர் கோரியுள்ளார்.
3. TET தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து, அதன் அடிப்படையில் மனுதாரருக்கு உரிய வாய்ப்பு வழங்கும் வரை பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தடை விதிக்கப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இரண்டு வார காலத்திற்குள் டெட் தேர்வு பெற்றவர்கள்/ தகுதியானவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது இரண்டு வார காலத்துக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அதுவரை கலந்தாய்வு நிறுத்தி வைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. - தகவல்
Post a Comment