Title of the document

 🛑🧣 *இடைநிலை ஆசிரியர்களை இன அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்காக தொடர் உண்ணாவிரதம் போராட்டம்*

*🔥 மற்ற ஆசிரியர் சங்கங்களும், அரசு ஊழியர் இயக்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுகோள் !*

*தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க கோரி வரும் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் இடைநிலை பதிவுமூப்பு இயக்கம் (SSTA) மற்றும் _இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு_ சார்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளோம்.*

*தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்கள் & ஆசிரியர் இயக்கங்களும் அவரவர் சார்ந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களின் நன்மைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து  போராடி வருகிறோம்.*

*நமக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் என்ற இலக்கை நோக்கமாக கொண்டு பயணித்து வருகிறோம். ஒவ்வொரு தனிச்சங்க நடவடிக்கையும் ஒவ்வொரு மாதிரியாக திட்டமிடப்படும். அதில் தற்போது எங்கள்     இயக்கத்தின் இந்த தனிச்சங்க நடவடிக்கைக்கு ஒத்த கருத்தும் பொதுவுடமை சிந்தனையும் உள்ள ஆசிரியர் இயக்கங்களும், அரசு ஊழியர் இயக்கங்களும் ஆதரவளிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.*

*இன்று இளையவர்களுக்கு தானே பாதிப்பு என்றால், நாளை மூத்தவர்களுக்கும் இதே போன்ற பாதிப்புகளை அரசு தைரியமாக ஏற்படுத்தும்.*

*ஆட்சி தான் மாறி உள்ளது. காட்சி இன்னும் மாறவில்லை. வலிமை மிக்க போராட்டங்களால் மட்டுமே இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும், என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரமான அடிப்படை ஊதியத்தை இழந்து தவிக்கும் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்கான போராட்டம் இது. இந்த ஒரு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் போராடும் போர்க்களம் அல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய இயக்கங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து களம் காணும் போராட்டம் இது. இதற்கு முன்னர் வரலாறு காணாத பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம்.*

_*இப்போதும் உயிரை துட்சமென மதித்து கடும் குளிரிலும், மழையிலும் பலருக்கு உடல்நல குறைபாடு உள்ளபோதும் உதிரத்தை உரமாக்கும் கடுமையான தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளோம்.*_

*இடைநிலை ஆசிரியர்களின் 13 ஆண்டுகால இன அழிப்பை தடுக்க உள்ளவர்கள் ஆதரவு அளிக்கலாம். இதிலும் மாற்று கருத்து உள்ள சகோதர இயக்கங்கள் இப்பதிவினை கடந்து செல்லலாம்.*

            *நன்றி*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*ஜே.இராபர்ட்*

*மாநில பொதுச்செயலாளர்*

*SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்

*மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்

*2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post