பள்ளிகளுக்கு அவசர உத்தரவு !
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க வசூலிக்கப்படும்.
இந்த நிதி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு அனுப்பப்படும்.
அதேநேரம், அனைத்து பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு, இணைப்பு நிதி ஒன்றை கட்டாயமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, தொடக்க பள்ளிகள், 150 ரூபாய்; நடுநிலை, 225; உயர்நிலை, 800; மேல்நிலை, 1,200 ரூபாய் செலுத்த வேண்டும்.
மெட்ரிக் பள்ளிகளில் மேல்நிலை பள்ளிகள், 1,200; மற்றவை, 800 ரூபாய் இணைப்பு நிதி செலுத்த வேண்டும் என, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது
إرسال تعليق