ஜாதி, வருமான, இருப்பிட,வாரிசு சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது ? (www.tnesevai.tn.gov.in)
ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்
- வருமானச் சான்றிதழ்
- சாதிச்சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- ஓபிசி சான்றிதழ்
- வாரிசு சான்றிதழ்
- முதல் பட்டதாரி சான்றிதழ்
- வேலையில்லா பட்டதாரி சான்றிதழ்
- விதவை சான்றிதழ்
- கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ்
போன்றவைகள் விண்ணபிக்கலாம்... விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்
https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx#
எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்
முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx#
என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.
அடுத்து அதில் உள்ள Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
அதில் தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு sing up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய மொபைல்எண்ணுக்கு ஒரு otp எண் அனுப்பப்படும். அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Registration ஆகிவிடும்.
அடுத்து Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள் அவற்றுள் user name, password டைப் செயுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.பின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ID லாகின் ஆகிவிடும். அல்லது உங்கள் மொபைல் எண்பதிவு செய்து அதில் வரும் ஓடிபி மூலமும் லாக் இன் செய்யலாம்
லாக் இன் உள் சென்றவுடன் அதில் Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அதில் Revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இவற்றை கிளிக் செய்தவுடன் Revenue department-யில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று list out காட்டப்படும்.
அவற்றில் நீங்கள் என்ன விண்ணப்பிக்க போகின்றீர்களோ அதனை செலக்ட் செய்து processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து can நம்பர் பதிவு செய்ய வேண்டும் அதில் உங்கள் விவரம், தந்தை பெயர், தாயார் பெயர், குடும்ப உறூப்பினர் விவரம் என அனைத்தையும் பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான்
அடுத்து நீங்கள் செலக்ட் செய்த கோரிக்கைக்கு தேவையான documents-ஐ upload செய்ய வேண்டும்.
அதாவது தங்களுடைய புகைப்படம், Any address proof, Birth certificate, self-declaration போன்றவற்றை upload செய்ய வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் upload செய்த பிறகு make payment என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றை கிளிக் செய்து கிரிடிட் கார்ட், டெபிட் கார்டினை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும்.
இவ்வாறு இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த சில நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழை பெற்று கொள்ளலாம்
LOGIN செய்ய ID CREATE செய்வது எப்படி ?
CAN நம்பர் பதிவு செய்வது எப்படி?
ஜாதி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
கணவனால் கைவிடபட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!
இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையரகம்
நல்லாளுமை செய்யும் பொருட்டு , தகவல் தொழில்நுட்பக் கருவிகளின் வாயிலாக அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, திறன்களை மேன்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இணக்கமான வகையில் வெளிப்படைத்தன்மையுடன் திறன் மிகுந்த சேவைகளை வழங்குவதையே இதன் நோக்கம்.
Website: https://tnega.tn.gov.in/
TamilNadu eGovernance Agency
TNeGA is to improve the quality of life of our Citizens through efficient delivery of Government Services using the tools of Information Technology, and to create cost effective, scalable solutions for Governance
People friendly initiatives, we welcome these very much.
ReplyDeletePlease correct 'sing up' command words in the description to 'Sign up' occurring multiple times. நன்றி,
ஆ.சீ.க
Davavarushini
ReplyDeleteSc
ReplyDeleteAthithiravetar
ReplyDeleteAthithiravitar
ReplyDeleteSc
ReplyDeleteATHITHIRAVIDAR
ReplyDeleteCaste
ReplyDeletePost a Comment