TNPSC - ஆதார் இணைக்க தேர்வர்களுக்கு அவகாசம்!
அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஒரு முறை நிரந்தர பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணை இந்த மாதம், 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு, நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். apply.tnpscexams.in, எனவே, மார்ச் 23க்கு முன் தங்களின் ஆதார் எண்ணை, நிரந்தர பதிவுடன் இணைக்க வேண்டும். மற்ற தேர்வர்கள், ஏப்., 30க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஏற்கனவே ஆதார் எண் இணைத்தோர், மீண்டும் இணைக்க தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment