Title of the document

TRB தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு.  






தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் TRB தேர்விற்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யுமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.

TRB தேர்வு:

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017 – 18 ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 2019ம் ஆண்டு அதற்கான அறிவிப்பு TRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து TRB தேர்வு வாரியமும் விரிவுரையாளர் தேர்வை நடத்த முடிவு செய்து தேர்வு தேதியை வெளியிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டும் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் அந்த தேர்வானது வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேதியானது நிர்வாக காரணங்களை பொறுத்து மாறுபடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேர்விற்கு தங்களது கல்லூரிகளை தேர்வு மையங்களாக ஒதுக்கீடு செய்யுமாறு அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم