*🔴அதிமுக - வின் தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் இல்லை.*
*10 விழுக்காடு ஓட்டு வங்கியை இழக்கிறதா அதிமுக?*
*--- ஓர் அலசல்*
தேவையற்றவர்களா அரசு ஊழியர்கள்?
தேர்தலில் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாதா?
இப்படியான கேள்விகள் மிக ஆழமானவை.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களை முற்றிலும் நிராகரித்துள்ள அதிமுக அரசு அதற்கான இழப்பை பெற்றே தீரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அது எப்படியென்றால்
அரசு ஊழியர்கள் கிட்டதட்ட 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிப்புரிந்து வருகிறார்கள்.இவர்கள் முன் வைத்து போராடுகிற பிரதான கோரிக்கைகள் இரண்டு மட்டுமே.அதாவது பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.இத்தனைக்கும் அவை இரண்டுமே கடந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக- வின் சார்பாக சொல்லப்பட்ட வாக்குறுதிகள் என்றே சொல்லப்படுகிறது.அப்படி இருந்தும் அந்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போனது அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி போராடிய அரசு ஊழியர்களின் மீது 17 B போன்ற கடுமையான தண்டைகளை ஏவி அவர்களின் கோபத்தை இன்னும் உக்கிரப்படுத்தியுள்ளார்கள்.இந்த கோபமே அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க காரணம்..
அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஓட்டு சதவிகிதம் தான் எவ்வளவு?
அதாவது 10 லட்சம் அரசு ஊழியர்களில் 2 லட்சம் வாக்குகள் அதிமுகவிற்கு சாதகமாக போக வாய்ப்பிருக்கிறது.
மீதமுள்ள 8 லட்சம் ஓட்டுகள் மட்டுமே திமுகவிற்கு விழும் என்று நாம் கணக்கு போட்டால் அது தான் தவறு.அதாவது 8 லட்சம் அரசு ஊழியர்கள் அல்ல,8 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்பம் என்று நாம் பார்க்க வேண்டும்.ஒரு அரசு ஊழியர் குறைந்தபட்சம் 5 ஓட்டுகள் வைத்திருக்கிறார் என்று பொருள்,அவ்வாறு இருக்கும் போது 8 லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள்,அவர்களின் உறவினர்கள் இவை எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது
8 லட்சம் அரசு ஊழியர்களிடம் கிட்டத்தட்ட 50 இலட்சம் வாக்குகள் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
50 இலட்சம் வாக்குகள் என்பது மொத்த வாக்காளர்களில் 10 விழுக்காடு..
இந்த விழுக்காடு நிச்சயம் இம்முறை திமுகவிற்கு கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இந்த 10 விழுக்காடு வாக்கு வங்கி தான் தேமுதிக விற்கு 25 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது.இந்த 10 விழுக்காடு வாக்குகள் தான் தேமுதிக வை எதிர்கட்சி அந்தஸ்தில் உட்கார வைத்தது.2016 ல் கூட 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக வெற்றி பெற்றது.இந்த சூழ்நிலையில் இந்த 10 விழுக்காடு வாக்கு வங்கியை அதிமுக சுலபதாக இழக்கிறது.
பழைய ஓய்வூதியம்,சம வேலைக்கு சம ஊதியம் போன்ற அரசு ஊழியர்களின் நீண்ட வருட கோரிக்கைகளை தங்களுடைய தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்து ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் ஆதரவை பெற்று மிக வலுவாக நிற்கிறது.
இந்த கணக்கு அதிமுகவிற்கு புரியாமல் போனதன் காரணம் இதுவரை விளங்கவில்லை..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment