Title of the document

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்குகான மிக முக்கிய பயனுள்ள தகவல்கள்

முதுகலை ஆசிரிய சகோதர சகோதரிகளே புதிதாக பணியேற்பு செய்துள்ள வணக்கங்கள் 

 
நீண்ட நாள் , நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடா முயற்சியால் , அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ள வேதியியல் மற்றும் பொருளியல முதுகலை ஆசிரியர்களே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ..... தங்களின் பணியினை சிறப்புடன் செய்யவீர்கள் வாழ்த்துகள் ...... தங்கள் பள்ளி தலைமையாசிரியரும் - அலுவலக இளநிலை உதவியாளரும் வழிகாட்டுவார்கள் .. சில தகவல்களை தங்களுடன் பகிர்ந்து இருப்பினும் எனக்குத் தெரிந்த கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .. . 
 
 இணை இயக்குநர் அவர்கள் வழங்கியுள்ள அசல் பணி நியமன ஆணையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் - பள்ளித் தலைமையாசிரியர் வழங்கியுள்ள பணியேற்பு அறிக்கையின் நகலினை பெற்றுக் கொள்ளுங்கள் .



CPS Number  பெற விண்ணப்பிக்க வேண்டும் :

 
முதலில் தாங்கள் தன்பங்கேற்பு ஒய்வூதிய எண் பெற விண்ணப்பிக்க வேண்டும் ( CPS Number ) . ) . - CPS Application Form இணைத்துள்ளேன்- முதல் மூன்று பக்கங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் தெளிவாக பூர்த்தி செய்து Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . இணையதள முகவரி http://cps.tn.gov.in/ - விண்ணப்பித்த 3-4 நாட்களில் CPS - Number Allotted letter online இல் பெற்றுவிடலாம் - CPS - Number , இருந்தால் தான் IFHRMS மூலம் ஊதியம் பெற இயலும் - PAN Card , வங்கி கணக்கு எண் வைத்துக் கொள்ளுங்கள் ( SBI Bank இருந்தால் நன்று அல்லது தாங்கள் பள்ளி சார்ந்த கருவூலம் தொடர்புடைய வங்கி எனில் நன்று ) -  
 

 சான்றிதழ்கள் உண்மை தன்மை பெற விண்ணப்பிக்க வேண்டும் :

 
10 , 12 வகுப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையினை பெற கருத்துறுக்களை பள்ளித் தலைமையாசிரியர் வழியாக நேரடியாக அரசுத் தேர்வுத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக் வேண்டும் ( ஒவ்வொரு மாவட்டத்தில் AD ( Examination ) அலுவலகம் உள்ளது ) ( DEO அலுவலகம் வழியே சென்னைக்கு விண்ணப்பிக்க கூடாது ) - உண்மைத்தன்மை பெற , இளங்கலை , முதுகலை , கல்வியியல் பட்டப் படிப்பிற்கு பட்டச் சான்றிதழ் ( convocation - Degree certificate ) நகலினை உரிய கட்டணத்துடன் உரிய படிவத்தில் தலைமையாசிரியர் முகப்புக் கடித்துடன் விண்ணப்பிக்க வேண்டும் . 
 
கட்டண விபரம் மற்றும் விண்ணப்பப்படிவம் பற்றிய விபரங்களுக்கு சார்ந்த பல்கலைக்கழக இணையதளத்தினைப் பார்க்கவும் . ( அரசுப் பணி எனில் சென்னை பல்கலைக்கழகத்தில் உண்மைத்தன்மை பெறக் கட்டணம் கிடையாது , அது போன்று அரசுப் பணி எனில் பல பல்கலைக்கழகத்தில் கட்டணங்கள் குறைவு , தனியார் எனில் கட்டணம் அதிகம் )- வெளி மாநில பட்டப் படிப்பு எனில் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் ( Other State Degree certificate - Evaluation by DEO ) தற்போதைய நிலையில் 10.03.2020 க்கு பின் பணியேற்ப்பு செய்யும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு கிடையாது . - பணியில் சேரும் முன்னர் உயர்கல்வி பெற்று இருப்பின் அந்த உயர்கல்விக்கும் உண்மைத் தன்மை பெற்றுக் கொள்ளுங்கள் . தங்களுடன் TRB தேர்வு எழுதிய மற்ற பாட நண்பர்கள் 10.03.2020 முன் ( பிப்ரவரி 2020 இல் ) பணியில் சேர்ந்து ஊக்க ஊதிய பெற வாய்ப்புள்ள நிலையில் அதைக் காரணம் காட்டி வருங்காலங்களில் நீங்களும் நீதிமன்றத்தை நாடி உரிய பலன்களை பெறமுயற்சிக்கலாம் . - தாங்கள் உயர்கல்வி படித்துக் கொண்டு இருப்பின் அந்தப் படிப்பினை தொடர உரிய அனுமதியினை பெற விண்ணப்பித்து படிப்பினை தொடர அனுமதியை எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொள்ளுங்கள் . - தாங்கள் , பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கும் அனைத்து விண்ணப்பங்களையும் நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . -  
 
தங்கள் பெயர் படிப்பு பதவி பள்ளியின் பெயருடன் Rubber Stamp Seal செய்து வைத்துக் கொள்ளுங்கள் , செய்முறைத் தேர்வு | Attestation செய்ய பயன்படும் . 
 

தங்களுக்கு பெறத்தகுதியுடைய பணப்பலன்கள் - :

 
Pay - 36900 ( Level 18 ) 
- DA - 17 % ( 6273 ) 
- MA - HRA பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும் ( 550,1500,1800,2600,4200 ) 
- CCAL மாநகராட்சி பணியிடங்களில் மட்டும் - 300 பிடித்தங்கள் 
CPS - 4317 ( 10 % ( Pay + DA ) ) 
 FBF - 60 SPF - 70 N
HIS - 180 ( கணவன் - மனைவி தமிழக அரசு ஊழியர் எனில் பிடித்தம் வேண்டாம் ) - பணியேற்ற நாள் முதல் இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் பருவம் - 
தகுதிகாண் பருவத்தில் மருத்துவ விடுப்பு அனுமதி இல்லை ( 2 ஆண்டுகள் வரை ) - 
தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பு அனுமதி உண்டு - தகுதிகாண் பருவத்தில் தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு - ( ஆண்டிற்கு 12 நாட்கள் )

பணிக்கலாச்சாரத்தை கடைபிடியுங்ககள் :

 
* பள்ளி அருகிலோ அல்லது தொலைவிலோ ... மகிழ்ச்சியாக பணியாற்றங்கள் 
* மோசமான பள்ளி என்று எதுவும் இல்லை அவரவர் பார்க்கும் பார்வையில் தான் மாறுபாடுகள் .. 
* சவால்கள் நிறைந்த பள்ளி எனில் அதை சமாளிக்கும் தகுதியும் திறமையும் தங்களுக்கு உண்டு என நம்புங்கள் 
* மாணவர்களுக்கு கற்றல் - கற்பித்தல் பணியே தங்களுக்கு தலையாய பணி இருப்பினும் நேரம் கிடைக்கும் போது மாணவர் நலன் சார்ந்த அலுவலகப் பணியையும் கற்றுக் கொள்ள முயலுங்கள் - மதிப்பும் மரியாதையும் உயரும் 
* தலைமையாசிரியர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் சமமே ... அனைவரிடமும் அன்புடன் பழகுங்கள் ... புன்முறுவல் நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் - மகிழ்ச்சியாக வைத்திருக்கும் . 
* தங்களை போல தங்கள் மாணவர்களும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பாடுபடுங்கள் 
* பாடம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் விருப்பமான துறை சார்ந்த புத்தகங்களின் வாசிப்பை கைவிடாதீர்கள் - தொடர் வாசிப்பு தங்களை செழுமைபடுத்தும் . 
 * கல்லுாரி பேராசிரியர் பணி , UPSC- CIVIL SERVICE Exam , Group - I Exams , DEO Exam , உயர் பதவிக்கான போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்யுங்கள் . ( முறையான அனுமதி பெற்று ) 
* ஒடுகின்ற நீர் தான் நதியாக மாறி கடலை சென்றடைகிறது 
 
. வாழ்த்துகள் . என எங்கள் மாணவர் நலன் ஆசிரியர் நலன் சார்ந்து தங்களுக்கு உதவிட TNPGTA இயக்க தோழமைகள் என்றும் தயாராக இருக்கிறார்கள் . 
 
TNPGTA மாநில சட்டச் செயலாளர் . 
க.செல்வக்குமார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( வேதியியல் )
 நகராட்சி மேல்நிலைப் பள்ளி மேலக்காந்திநகர் 
சாத்துார் - 626203 
விருதுநகர் மாவட்டம் . 
selva7pc@gmail.com
 



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post