Title of the document

விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி  





விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும், கரோனா குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கை அடுத்து, 10 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களுக்குப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அவற்றைப் பள்ளியில் மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இதற்கிடையே 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் இதனால் தொற்று பரவ வாய்ப்புள்ளதா என்று அச்சம் எழுந்தது.

இதுதொடர்பாக திருப்பூர், முதலிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களில் சிலருக்குக் கரோனா தொற்று ஏற்படுவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், ''பள்ளிகள் நடைபெற வேண்டும். குழந்தைகளின் கல்வி சிறக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் படிப்படியாகத் தான் வகுப்புகள் திறக்கப்பட்டு வருகின்றன. விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் சொல்லி இருக்கிறோம். ஆகவே எந்த அச்சமும் தேவையில்லை'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post