NMMS Exam Centre List and instructions 2021
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு :
சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு , இணைப்பில் உள்ள பள்ளிகள் தேர்வு மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது . எனவே மேற்படி தேர்வின் பொருட்டு தேர்வறைகள் , தளவாடங் டங்கள் மற்றும் இதர தேர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யுமாறு சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு மைய விவரங்கள் மற்றும் காலை 9.00 மணிக்கு தேர்வு தொடங்கி பகுதி | - மனத்திறன் தேர்வு ( Mental Ability Test ) ( MAT ) , பகுதி II படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test ) ( SAT ) நடைபெறும் தெளிவாக தெரிவிக்குமாறும் , தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை சரிப்பார்த்துக் கொள்ளுமாறும் இணைப்பு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
இணைப்பு :
தேர்வு மைய விவரம் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் . என ஒம் / முதன்மைக்கல்வி அலுவலர் , தருமபுரி . பெறுநர் : அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமையாசிரியர்கள் . பெறுநர் : சார்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ( வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக ) . நகல் : மாவட்டக் கல்வி அலுவலர்கள் , தருமபுரி / அரூர் / பாலக்கோடு - தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது . நகல் : உதவி இயக்குநர் , அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் , தருமபுரி .
إرسال تعليق