மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் செங்கோட்டையன் !
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான உத்தரவு வெளியாகியுள்ள நிலையில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மானவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவு வெளியாகியுள்ள நிலையில் பள்ளி வகுப்புகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் 'மாணவர்களிடம் நடத்திய ஆலோசனையில் 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜனவரி 19 முதல் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் முதல்கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளி செல்லலாம். மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்'என தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment