Title of the document

தைப்பூசத் திருவிழா - அரசு பொது விடுமுறை பட்டியலில் சேர்ப்பு ! 

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRRJShtT2NxfKsF0SSjjf4jQYysrwhvEa1zEt69Hk1dzUBPWWohGyl5HM1MVKGwMGugbE7UNGlhgIBl1OjeFz93gvvA5_8A7_GJSrMHJN-eLgCGu8-jgOi2sEvez54s8Pp-RpXl9tnMWYj/s320/FB_IMG_1609828256707.jpg 

05.1.2021 தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா . இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி , கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . இலங்கை , சிங்கப்பூர் , மலேசியா , மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது . பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது , இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர் . இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28 ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை , பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும் , இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post