2020 - 2021 ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
2020 - 2021 ஆம் நிதியாண்டின் வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
பழைய விதிமுறைபடி வரி கணக்கீடு - பிரிவு 115BAC
✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [Bonus, surrender, pay fix arrear if any]
✍நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.
✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.
✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.
✍housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம். (01.04.1999 க்கு பிறகு வீட்டுக்கடன் பெற்றிருக்க வேண்டும். 01.04.1999 க்கு முன் பெற்றிருந்தால் ₹30,000/- மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்)
✍housing loan - அசல் தொகையை Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.
✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12C படிவம் வைக்க வேண்டும்.
✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS தொகையில் அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.
✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)
✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).
✍80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
[Citizens - ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]
✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)
✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.
✍கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2020-2021) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.
✍️80EEA - மலிவு வீட்டு வசதிக்கான வீட்டுக் கடனில் கூடுதலாக ₹1,50,000 வரை வட்டியில் வரிச் சலுகை பெறலாம்.
நிபந்தனைகள்
🔹01.04.2019 முதல் 31.03.2020 க்குள் முதல் முறையாக வீட்டுக்கடன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
🔹வீட்டு சொத்தின் முத்திரை வரி மதிப்பு ₹45,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
🔹வீட்டின் தரை பரப்பளவு பெருநகரங்களில் 645 சதுர அடிக்கு மிகாமல், மற்ற நகரங்களில் 968 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
✍️80EEB - 01.04.2019 முதல் 31.03.2023 க்குள் கடன் அனுமதி பெற்று, மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு செலுத்தப்படும் வட்டிக்கு ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
✍நன்கொடை மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம். (10% of Gross Total Income only)
✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%
✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.
✍Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/- வரை 87A ல் கழித்துக் கொள்ளலாம். (புதிய மற்றும் பழைய வரி விதிமுறைகள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்)
✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ₹10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ₹10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
புதிய விதிமுறைபடி வரி கணக்கீடு - பிரிவு 115BAC
மொத்த வருமானத்தில்
2,50,000 - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 7,50,000 : 10%
7,50,001 - 10,00,000 : 15%
10,00,001 - 12,50,000 : 20%
12,50,001 - 15,00,000 : 25%
Above 15,00,000 : 30%
ஆக்கம்....
த.சங்கர், M.Sc., B.Ed.,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),
PUMS, அரிசிபாளையம்,
கொங்கணாபுரம் ஒன்றியம்,
சேலம் மாவட்டம்.
மிக்க மகிழ்ச்சி நன்றி சார்
ReplyDeleteதங்களுடைய தகவல் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி சார்
ReplyDeleteதங்களுடைய தகவல் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி சார்
ReplyDeletePost a Comment