Title of the document

G.O : 122 Date : 15.12.2020 - மாவட்ட கல்வி அலுவலர்கள் , முதன்மைக்கல்வி அலுவலராக தற்காலிக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு! 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி- முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் காலி பணியிடங்களை நிரப்புதல் -மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த காலி பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல்- ஆணை வெளியீடு அரசாணை எண் : 122 , நாள் : 15.12.2020








பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் , பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III- ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் தற்போது காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு , தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி வகுப்பு IV- ஐச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் பணி முதுநிலையில் முந்துரிமையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6 ( 1 ) -ன்படி மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிலையில் மூன்று ஆண்டு கால பணிக்காலத்தை நிறைவு செய்யாததால் , அவர்கள் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6 ( 1 ) -க்குத் தளர்வு அளித்து , தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் ) சட்டம் , 2016 பிரிவு 47 ( 1 ) -இன்கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்து , அவர்கள் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது . கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் இத்தற்காலிக பதவியுயர்வு பின்வரும் காலத்தில் முன்னுரிமை கோரும் உரிமையை அவர்களுக்கு அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post