பூஜ்யம் கல்வி ஆண்டு என்றால் என்ன ?
கல்வியாண்டை முற்றிலும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு எனப்படுகிறது. அவ்வாறு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்பட்டால் கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டில் எந்த வகுப்பும் படித்ததாகக் கருதப்படாது. அவர்கள் அடுத்த 2021 - 2022 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்புக்குத் தான் செல்வார்கள்.
அதேபோல் இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள் என ஒன்றாம் வகுப்பில் மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் சூழல் உருவாகும். ஆனால் பூஜ்யம் கல்வி ஆண்டு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு தற்போது வரை முடிவெடுக்கவில்லை.
Post a Comment