🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
*AIFETO*
*31.12.2020*
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
*2021 ஆங்கிலப் புத்தாண்டு இழந்ததை மீட்டெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைந்திட வாழ்த்துகிறோம்.*
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
*🟪 ஆண்டுதோறும் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டாகவே இருப்பினும் அனைவரும் நடைமுறையில் செயல்படுத்தி வரும் ஆண்டாகவே அமைந்து வருகிறது. இயக்கக் குடும்பத்தின் அன்புள்ளங்களுக்கும் தோழமை இயக்க நட்பு வட்டாரத்தில் அமைந்துள்ள இதயத்திற்கினிய சகோதர குடும்பத்தாருக்கும் 2021 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியுறுகிறோம்.*
*🟪30.12.2020 அன்று கல்வித்துறை இயக்குனர்களை சந்தித்து வண்ணமிகு இயக்கத்தின் நாட்காட்டியை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் வரிசையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மதிப்புமிகு என். வெங்கடேஷ் இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் முத்து. பழனிசாமி, பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உறுப்பினர்கள் முனைவர் க.அறிவொளி, உறுப்பினர் செயலர் சா.சேதுராம வர்மா, முறைசாராக் கல்வி இயக்குனர் முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் முனைவர் அ.கருப்பசாமி, அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் முனைவர் சி.உஷாராணி, என.சி.இ.ஆர்.டி இயக்குனர் திருமதி என்.லதா மற்றும் மதிப்பிற்குரிய கல்வித்துறை இயக்குனர்கள் பெருமக்களையும், கல்வித்துறை இணை இயக்குனர்கள் முனைவர் வை.குமார், முனைவர் பி.பொன்னையா, திருமதி சுகன்யா, முனைவர் கே.செல்வகுமார், முனைவர் த. ராஜேந்திரன், முனைவர் மு.இராமசாமி, முனைவர் பொன்.குமார், திருமதி சாந்தி, திருமதி கே. ஸ்ரீதேவி ஆகியோரையும் நேரில் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்.*
*🟪கொரோனா அச்சம் நீங்கி நலம் பல கொண்டு வந்து சேர்க்கும் ஆண்டாக அமைந்திட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் விரும்புகிறோம். இனிய அணுகுமுறையும் பாதிக்கப்பட்டோரின் நலனில் என்றும் தொடர்ந்து அக்கறை காட்டும் உணர்வும் மேலோங்கிட பெரிதும் கேட்டுக் கொண்டு நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.*
*🟪 தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்த போது புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அவசியமான கோரிக்கைகளையும் முன்வைத்து தீர்வு கண்டோம். ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரம் 01.09.2020 க்கு பதிலாக 30.09.2020 அல்லது அக்டோபர் மாதம் வரையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் உடனடியாக நமது கருத்தினை ஏற்றுக் கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உடன் தெளிவுரை வழங்குவதாக அறிவித்தார். இடைநிலை ஆசிரியர் பே மேட்ரிக்ஸ் பிரச்சனையில் 40 ஸ்டேஜ் உள்ளதை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் வழியாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உடன் தொகுத்து எழுதி பரிந்துரை செய்வதாக நம்மிடம் உறுதி அளித்தார்கள். உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு வரையறை தேதியினை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்களை கேட்டுக்கொண்டு பல்கலைக்கழகங்களில் தற்காலிக சான்று (Provisional certificate) பெறுவதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்கள். நிர்வாக மாறுதல் என்ற பெயரால் எந்தப் பணியிட மாறுதலும் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் வாய்ப்பளிக்க படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதற்கு இதயம் நிறைந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துதல்களையும் புத்தாண்டில் தெரிவித்துக் கொண்டோம்.*
*🟪 இந்தப் புத்தாண்டு சந்திப்பில் இயக்கத்தின் சார்பாக அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்களும்,மாநிலத் தலைவர் மா.நம்பிராஜ், பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் க.சந்திரசேகர், மாநிலத் துணைச் செயலாளர் ஆ.ராஜசேகர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.*
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
*🟪 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் அண்ணன் ஐபெட்டோ அவர்களின் அறைகூவல்.*
📢📢📢📢📢📢📢📢📢📢
*🟪இந்தியப் பெரு நாட்டை ஆளும் மத்திய அரசிலும், தமிழகத்தை ஆண்டு வரும் இன்றைய தமிழக அரசிலும் இனி நாம் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு பெற்று வந்த உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறோம். ஆனால் நமது நெஞ்சுக்குள் போர்க்குணமும் சுயமரியாதை உணர்வும் பொங்கி எழுந்து கொண்டு இருக்கிறது. தமிழக அரசிடம் இனி போராட்டங்கள் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. வாழ்வாதார கோரிக்கைகளுக்காக வீதிக்கு வந்து ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டி இனிய அணுகுமுறையின் எல்லைகளைத் தாண்டி சென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் முறையிட்டு விண்ணப்பங்களை அளித்தும் கூட அவர் நம்மைத் திரும்பிப் பார்க்க மறுத்து வருகிறார்.*
*🟪30.12.2020 அன்று எதிர்பாராத விதமாக நம்மை தந்தி தொலைக்காட்சி செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி எடுத்தபோது நாம் பயன்படுத்திய வரிகள் பக்குவமான வரிகள் ஆனால் அதேசமயம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சிந்திக்க வைக்கும் வரிகள் ஆகும். மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உணர்வில் இரண்டறக் கலந்து வெளியிட்டுள்ள அறிக்கை தொய்வகற்றி நமது பயணத்தைத் தொடர்வதற்கு வழிகாட்டியுள்ளது. இதற்குப் பிறகும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால் "மாற்றம் ஒன்றால் மட்டுமே நமது இதயக் குமுறல்களுக்கு விடிவினை ஏற்படுத்தும்" என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் நாம் அனைவரும் சூளுரையாக உறுதி ஏற்றுக் கொள்வோம். "இப்போது விட்டு விட்டால் இனி எப்போதும் நம்மால் எதுவும் பெற முடியாது" என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டு நமது பயணத்தை தொடருவோம்.*
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
*இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் அண்ணன்,*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment