பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி துவக்கம்
தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளை அடையாளம் கண்டு, முறையாக பள்ளிகளில் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது .
அதன்படி இந்த குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது,.
இந்நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் லதா, நாளை அந்த மாவட்டங்களுக்கு நேரில் செல்கிறார். மாநிலம் முழுவதுமான ஆய்வு முடிந்தபிறகு, பள்ளிகள் திறந்த்தும், பள்ளி செல்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளை நேரடியாக பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment