பள்ளிக் கல்வி - மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளம் (Ramp) மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் திரு . L. முருகானந்தம் என்பார் டபிள்யுபி எண் .14542 , & 6551/2017 மற்றும் 1749/2019 உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கில் 29.10.2020 அன்று இடைக்கால தீர்பாணை பெறப்பட்டுள்ளது. இடைக்கால தீர்பாணையை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் சாய்தளம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகளை ஏற்படுத்தப்பட்டது சார்பான மாவட்ட வாரிவாக பள்ளிகளின் எண்ணிக்கையும் மற்றும் ஏற்படுத்தாத பள்ளிகளுக்கு ஏற்படுத்த தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பத்தக்க வகையிலும் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வகையிலும் இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் விவரங்களையும் மற்றும் அறிக்கை அனுப்பிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இது வழக்கு சார்பான அறிக்கை என்பதால் தனிக்கவனம் செலுத்தி இக்கடிதம் கண்ட ஒரு வார காலத்திற்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Dir Proceeding - Click Here To Download..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment