Title of the document

கர்நாடகாவில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு - ஆன்லைனில் படிக்கவும் அனுமதி.

 கர்நாடகாவில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான கல்லூரிகள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன. நேரில் வர முடியாத மாணவர்கள் ஆன்லைன் வழியாககற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரண‌மாக, மற்ற மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டுக்காகவும் கடந்த ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது.

கரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் கல்விநிலையங்களை திறப்பது குறித்துஅதிகாரிகளுடன் கர்நாடக அரசுஆலோசித்து வருகிறது. அதன்படி இந்த கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், பொறியியல்,சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான கல்லூரிகளை 17-‍ம் தேதி (இன்று) திறக்க முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.

இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன. கல்லூரி வளாகம், வகுப்பறை உட்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூர இடைவெளியுடன் இருக்கை கள் போடப்பட்டுள்ளன. கல்லூ ரிக்கு வரும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

“கல்லூரிகளில் உரிய பாதுகாப்புடன் பாடம் கற்பிக்கும் அதே வேளையில், கரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும். வகுப்புக்கு நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கற்க அனுமதிக்க வேண்டும்” என கல்லூரி நிர்வாகங்களுக்கு உயர்க்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post