தமிழக கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கு!
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கில் தமிழக நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் தமிழகத்தில் கருவூலங்களில் ஆட்டோமேட்டிக் டிசரி வெல் பாசிங் சிஸ்டம் என்ற சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2017ம் ஆண்டு தமிழக நிதித்துறை மூலமாக பைனான்சியல் தி ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற சாஃப்ட்வேர் முறையை மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முதல்கட்ட பணிகள் தொடங்கியது. இதன்முலம் கருவூலங்களில் வழங்கப்படும் ஊதியங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தும் முறையானது முதற்கட்டமாக ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் சோதனை ஓட்டமாக நடைபெற்றது. இதில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறையை பயன்படுத்துவதால் ஆகஸ்ட் 31, 2020ம் ஆண்டு 20 சதவீத பென்ஷன் பணம் சரியான கணக்கிற்கு சென்று சேரவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் பழைய சாஃப்ட்வேர் முறையை பின்பற்றுவதற்கு தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலர் மற்றும் தமிழக கருவூல ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment