தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சரின் இன்றைய பதில்
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பள்ளிகள் திறப்பு குறித்து இன்று (05.11.2020) தமிழக முதலமைச்சர் அவர்கள் அளித்த பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையின் பேரிலேயே பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே பல மாதங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மூடியுள்ளது என்றும், இணையத்தளம் வாயிலாக பாடம் நடத்தப்பட்டாலும் அவர்களுக்கு சந்தேகம் மற்றும் புரிந்துகொள்ள முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்தில் வந்தது.
கொரோனா குறைத்துக்கொண்டு இருப்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இதன் பேரிலேயே பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என்று கூறுவதால், அதனையும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த
தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
ஆசிரியர்கள்
தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை,
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின்
வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற
Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின்
பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்
பதிவேற்றம் செய்யப்படும் ..
Please tell me the answer when is school is reopening
ReplyDeletePost a Comment