Title of the document

 தமிழக அரசு ஊழியர் சம்பளம் குறைப்பு; அரசு திடீர் நடவடிக்கை 

  இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

தமிழக அரசு துறைகளில் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இதன்படி உதவி பொறியாளர்கள் உட்பட சிலபதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பளம் குறைக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களாக தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


இக்குழு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக தனி நபர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களிடம் மனுக்கள் பெற்றது.


அந்த மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தது.குழுத் தலைவர் முருகேசன் செப்டம்பர் மாதம் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து அறிக்கை அளித்தார். 

அறிக்கை அடிப்படையில் அரசு ஊழியர்கள் பலரின் சம்பளத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 

அதன்படி பொதுப்பணி துறை உதவிப் பொறியாளர்கள் மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர்கள் உட்பட பலருக்கு அடிப்படை சம்பளத்தை குறைத்து நிர்ணயம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதனால் ஒவ்வொருவருக்கும் 4500 - 5000 ரூபாய் வரை மாத சம்பளத்தில் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


அதேநேரம் கால்நடை துறை உட்பட சில துறை ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post