Title of the document

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் Covid-19  சார்ந்து ஒரு நாள் பயிற்சி - Director Proceedings..







பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை ( பள்ளி திறப்பதற்கு முன் ) :

1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும்

2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல்  செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.



பள்ளிகள் திறந்த பின் :



1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.









# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post