Title of the document

G.O 97 Date : 21.10.2020 இணை இயக்குனர்கள் பதவி உயர்வு அரசாணை வெளியீடு ! 

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் வகுப்பு II- இன் கீழுள்ள இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் ( பாடத்திட்டம் ) பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு , 

பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுள் பணி முதுநிலைப்படி முந்துரிமையிலுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரியும் திருமதி . எஸ் . சாந்தி என்பாருக்கு அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் ) சட்டம் 2016 , பிரிவு 47 ( 1 ) -இன்கீழ் இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி , 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் ( பாடத்திட்டம் ) பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது . இந்த தற்காலிகப் பதவி உயர்வு பின்வரும் காலத்தில் அன்னாருக்கு முன்னுரிமை கோரும் உரிமையை அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது . 

 
IMG-20201021-WA0019

IMG-20201021-WA0018

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post