Title of the document

CPS தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி 

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ) ஏப் .1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது. இதில் 5.5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும் . ஆனால் , ஆணையத்திடம் இதுவரை ஒரு ரூபாய்கூட செலுத்தவில்லை. இதன்காரணமாக ஓய்வு பெற் றோருக்கும் , பணியில் இறந் தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை . ) இதனால் , அதிருப்தி அடைந்த ஊழியர்கள் , ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 2016 - ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது . இக்குழு இறுதி யாக ஐஏஎஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டது. 2018 - ல் இக்குழு அரசிடம் அறிக்கை அளித்தது. ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் , ஓய்வு பெற்ற ஊழியர்கள் , ஆசிரியர் கள் அதிருப்தியில் உள்ளனர்.


 புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியது:

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர் களிடம் பிடித்த தொகை , அரசின் பங்குத்தொகை என ரூ .35 ஆயிரம் கோடி அரசிடமே உள்ளது . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்றோர் , பணியில் இறந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் . இதில் பாதிக்கும் குறைவானவர்களே ஓய்வூதியத் தொகையைப் பெற்றுள்ளனர் . புதிய ஓய்வூதியத் திட்டப்படி மத்திய அரசு , பிற மாநில அரசுகள் பணிக்கொடை அளிக்கின்றன. ஆனால் , தமிழகத்தில் ஓய்வு பெறுவோருக்கு பணிக்கொடை கொடுப்பதில்லை . மேலும் பிடித்த தொகையில் 60 சதவீத பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள 40 சதவீதத்தில் ரூ .1 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ .6,500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் . பணியின்போது இறந்தோரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆனால் , அதை தரவில்லை . பிற மாநிலங் களில் ஊழியர்களிடம் பிடிக்கும் 10 சதவீத தொகையுடன் , அரசு கள் 14 சதவீத தொகையைச் செலுத்து கின்றன . ஆனால் தமிழக அரசு 10 சதவீதமே செலுத்துகிறது . வல்லுநர் குழு அறிக்கை மீது நட வடிக்கை எடுத்து பழைய ஓய் வூதியத் திட்டத்தையே செயல் படுத்த வேண்டும் , என்று கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post