மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – டிசம்பரில் அறிவிப்பு
கொரோனா காலகட்டத்தில் முடங்கிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வரும் டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்படும்,
- மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது இதன்படி கடந்த 2020 ஜனவரியில், அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தியது.
- பின்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின்அகவிலைப்படியை அரசாங்கம் முடக்கியது. கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படியை அரசாங்கம் அதிகரிக்கவில்லை.
- ஊழியர்களுக்கு பழைய விகிதத்தில் அகவிலைப்படியை வழங்கி வருகிறது. இப்போது அரசாங்கம் மீண்டும் அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அறிக்கையின்படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிக்க டிசம்பரில் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். இதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
إرسال تعليق