Title of the document

உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் விவரங் களை அக் .29 - ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தொடக் கக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார் . இது தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் சி.பழனி சாமி , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம் :

கரோனா பரவல் காரணமாக நிகழ் கல்வியாண்டில் மட்டும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த செப் .30 - ஆம் தேதி நில வரப்படி மாணவர்கள் வருகையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் . அதன் முடிவில் ஆசிரியர் இல்லாத உபரி காலிப் பணியிடங் களை இயக்குநரகத்தில் சரண் செய்ய வேண்டும் . மேலும் , உபரி யாக உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அக் .29 - ஆம் தேதிக் குள் அனுப்ப வேண்டும் . இதுதவிர ' எமிஸ் ' தளத்தில் பதிவேற் றப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் . ஏனெனில் , அந்த எண்ணிக்கை அடிப்படை யில்தான் அரசின் இலவச நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் . அதேநேரம் ஆய்வின்போது போலியான மாணவர்கள் எண் ணிக்கை இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு அந்த பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் . மேலும் , பணியாளர் நிர்ணயம் செய்வதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது. 




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post