Title of the document

 உயர்கல்வி தகுதிக்கான ஊக்க ஊதியம் யாருக்கு ரத்து செய்யப்படும் ?

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத் துவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதியம் ( அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட் ) வழங்கப்படுகிறது. அதுபோல் , கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற சார்நிலைப் பணியாளர்களும் ஊக்க ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் , அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு கடந்த மார்ச் 10 - ந் தேதி அரசாணை வெளியிட்டது.


இந்த அரசாணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் , பேராசிரியர்களுக்கும் பொருந்துமா ? என்ற குழப்பம் எழுந்தது. அதைத் தொடர்ந்து இதற்கான விளக்கத்தை அளித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவை ஒன்றை வெளியிட்டார்.


அதில் , அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை , ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். கடந்த மார்ச் 10 - ந் தேதிக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post