Title of the document

 40% குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? 

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

 பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறைதெரிவித்து உள்ளது. அவை எவை என்பதை வெளியிட வேண்டும், என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றால்பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் மாணவர்களின் மன நிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துஉள்ளது. குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்கள்நலன் கருதி அந்த விபரங்களை வெளியிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post