Title of the document

 தமிழகத்தில் அரசு துறைகளில் பல்வேறு நிலைகளில் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமும், வேலைவாய்ப்பு அலுவலகம்  மூலமும் நிரப்பபடுகிறது. அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் பணியிடங்களுக்கும் 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு  மற்றும் வரும் ஆண்டுகளில் அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது கடினமான காரியம். எனவே, இந்த தேர்வுக்காக காத்திருந்தவர்கள்  வயது வரம்பினை காரணம் காட்டி அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.  ஏற்கனவே, அரசு காலி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு செய்த இடங்களில் அவர்கள் இல்லை எனும் பட்சத்தில் அந்த  இடங்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இதனால், காலி பணியிடங்களில் அவர்களால் சேர முடியாத நிலை ஏற்படுகிறது.


இந்த சூழலை  கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பை 30 வயதில் இருந்து 32 வயது ஆக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை  எழுந்தது. இதையேற்று பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா வயது வரம்பை 32 ஆக உயர்த்தி உத்தரவிட்டு அரசாணை  வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post