Title of the document

 2வது முறையாக NEET Exam எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிஅளித்துள்ளார். இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

 இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும். முதல் முறை தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார்,

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் நாளை (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post