கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு..?
இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை ஆன்லைனில் நடத்துமாறு பல்கலைக்கழகங்களை, உயர் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இறுதியாண்டு தவிர்த்த மற்ற பருவ மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 30-க்குள் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளில் பல்கலைக்கழகங்கள் இறங்கியுள்ளன.
இந்நிலையில், காகிதம், பேனா மூலம் தேர்வு நடத்துவது என்ற முடிவை உயர்கல்வித்துறை மாற்றி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்கள் 4 லட்சம் பேர் இருக்கும் சூழலில், அவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து தேர்வெழுத வைப்பது தொற்று அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வு நேரத்தை குறைக்கவும், தற்போது ஆன்லைன் தேர்வு எழுத முடியாவிடில், துணை தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது. சில பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு தேதியை அறிவித்துள்ளன. ஆன்லைன் தேர்வு அறிவிப்பு காரணமாக அந்த பல்கலைக்கழகங்கள் தேர்வு அட்டவணையை மீண்டும் மாற்றி வைக்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
إرسال تعليق