Title of the document

தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் அறிவிப்பு

கல்வி நியூஸ் : பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை நாளை மறுநாள் முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேறுபடுவதைப் போலவே, பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், நாளை மறுநாள் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு என்பது, ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவே முடியும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post