Title of the document

பள்ளிக் கல்வித்துறையில் செப்.28 அன்று நடைபெறவுள்ள அனைத்து கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள்! 





பள்ளிக் கல்வித்துறையில் செப்.28 அன்று தொடக்கக் கல்வி சார்பில் நடைபெறவுள்ள அனைத்து கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டப் பொருள் :



1. 2020 – 21 ஆம் கல்வியாண்டில் அரசு , நகராட்சி , ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை பள்ளிகள் , அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்ட விவரம் ( தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , ந.க.எண் . 4577 / ஜெ 2 / 2020 , நாள் . 13.08.2020 ) ( படிவம் 1-4 )




2. 2381 அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்ட விவரம் ( அரசாணை எண் .89 , SW & NMP ( SW - 7 ( 1 ) Dept , bróir : 11.12.2018 ) ( படிவம் - 5 )




3. 2020 - 21 ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி / யு.கே.ஜி மற்றும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விவரம் ( படிவம் - 6 )




4. 2381 அரசு / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளில் 2020 21 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள் , நோட்டுப் புத்தகங்கள் , சீருடை , புத்தகப்பை சென்றடைந்த விவரத்தை EMIS ல் பதிவு செய்யப்பட்ட விவரம்




5. கல்வித் தொலைக்காட்சி மற்றும் பிற தொலைக்காட்சி சேனல்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்காக ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் கால அட்டவணை நகல் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு வழங்கிய விவரம் ( படிவம் - 7 )




6. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி கட்டிடங்களில் சிறப்பு மராமத்து பணிகள் ( Special Repair Works ) மேற்கொள்வது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அளிக்கப்பட்ட விவரம் . ( ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண் .011392 / கே 4 / 2017 , நாள் .18.12.2019 ) ( படிவம் - 8 )




7. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பாதுகாப்பற்ற இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் ( To be demolished buildings ) சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் ( ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண் .011392 / கே 4 / 2017 , நாள் .18.12.2019 ) ( படிவம் - 9 )




8. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுச் சுவர் ( Compound Wall ) கட்டப்பட்ட விவரம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படுவதை பார்வையிட்ட விவரம் ( தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , ந.க.எண் . 011392 ! கே 4 ! 2017 , நாள் . 18.12.2019 மற்றும் 06.03.2020 ) ( படிவம் - 10 )




9. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் ( Additional class Room ) கட்டுதல் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் ( ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் அவர்களுக்கு தொ.க.இ அவர்களால் அனுப்பப்பட்ட கடித ந.க.எண் .016199 / கே 4 / 2018 , நாள் .06.03.2020 ) ( படிவம் - 11 )




10. குடிநீர் வசதி / கழிப்பிட வசதிகள் ( Additional drinking water , Toilet facilities ) கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் ( படிவம் – 12 )




11. ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை துாய்மை செய்வதற்கு அரசாணை எண் .151 , ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ( சிஜிஎஸ் 1 ) துறை , நாள் .30.11.2015 மற்றும் அரசாணை எண் .166 , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ( எம்ஏ 4 ) துறை நாள் .23.11.2016 ன் படி நியமனம் செய்யப்பட்ட துாய்மைப் பணியாளர்கள் துாய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்ந்து ஆய்வு செய்த விவரம்




12. தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான மாநில கணக்காயர் தணிக்கை தடைகள் ( AG audit pending Paras ) நிலுவைப் பத்திகளை நீக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம் . ( படிவம் - 13 )




13. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாதம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் ( Review Meeting ) முதன்மைக் கல்வி அலுவலர்களால் நடத்தப்பட்ட விவரம்




14. வட்டாரக் கல்வி அலுவலகங்களை CEOS , DEOS முன்னறிவிப்பின்றி பார்வையிட்ட ( BEOS Office Surprise Visit ) விவரம் மற்றும் ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்ட விவரம் ( படிவம் - 14 )




15. தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பான நீதிமன்ற வழக்குகள் ( Contempt Case , DCA , WP , WA மற்றும் SLP ) ஆய்வு செய்யப்பட்ட விவரம் ( படிவம் 15 - 19 )




16. ஈராசிரியர் பள்ளிகளில் கடந்தாண்டு மாறுதல் பெற்று விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல்




17. ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்தல் சார்பாக கூட்டமர்வு நடத்தப்பட்ட விவரம் ( தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல் முறைகள் , ந.க.எண் . 1907 / இ 1 / 2020 , நாள் . 05.09.2020 )




18. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2019-20ஆம் ஆண்டு மாணாக்கர் எண்ணிக்கையின்படி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்த விவரம் ( படிவம் 20 & 21 )




19. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்குதல் கருத்துருக்களை முழுமையான வடிவில் பரிந்துரை செய்தல்




20. புதிய மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் துவங்குதல் கருத்துருக்களை முழுமையான வடிவில் பரிந்துரை செய்தல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post