Title of the document

நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான, தேர்வு மையங்களை பார்க்கும் வசதியை, தேசிய தேர்வு முகமை அறிமுகம் செய்துள்ளது.



*பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய அளவில் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

 

*இந்த ஆண்டுக்கான தேர்வு, மே மாதம் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, செப்., 13ல் நீட் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


https://medicaldialogues.in/h-upload/2020/07/02/131180-neet.jpg


 

*தேர்வுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீட் - ஜே.இ.இ., போன்ற தேர்வுகளை, ரத்து செய்ய முடியாது என்றும், திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதை தொடர்ந்து, நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன.


*இதன் ஒரு கட்டமாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வசதி, இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

 

 *இதற்கிடையே, 'மாணவர்களின் பதிவு எண், தேர்வு மையம், தேர்வுக்கான மொழி, தேர்வு மையத்துக்குள் வரும் நேரம் போன்ற தகவல்களுடன், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post