Title of the document
'பிளஸ் 2 விடைத்தாள் நகல்களை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1, 'அரியர்' தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று பிற்பகல் முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தாங்கள் விணணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம்.


அதன்பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வரும், 21ம் தேதி காலை, 10:00 முதல், 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கான கட்டணத்தை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீடுக்கு, ஒரு பாடத்துக்கு, 505 ரூபாய்; மறுகூட்டலுக்கு, 205 ரூபாய்; உயிரியலுக்கு மட்டும், 305 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post