அழகு அரூர் காப்போம் - தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் !!

Join Our KalviNews Telegram Group - Click Here

*அழகு அரூர் நண்பர்களுக்கு வணக்கம்*,

     கொரோனா தொடங்கிய நேரத்தில் நமது அழகு அரூர் சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தினோம். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொரோனா குறைந்ததும் ஊரடங்கு முடிந்ததும் விழா ஏற்பாடு செய்து சான்றிதழ், சீல்ட் பரிசு வழங்க முடிவெடுத்தோம். அதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தோம்.
     ஆனால் கொரோனா காரணமாக இனி விழா ஏற்பாடு செய்ய வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. எனவே வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சமூக இடைவெளி பின்பற்றி வீட்டிற்கே சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளோம். தொலைவில் உள்ளவர்களுக்கு கொரியர் மூலம் வழங்க உள்ளோம். ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த பரிசுகள் உங்கள் வீடு தேடி வந்தடையும். இது நாள் வரை பொறுமையுடன் இருந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.


*தன்னார்வ குழுக்களுக்கு கேடயம்* :

  கொரோனா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கும் சமுகத்திற்கும் சிறப்பாக தொண்டு ஆற்றிய அரூர் ஒன்றியத்தில் உள்ள தன்னார்வ குழுக்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கேடயம் வழங்க உள்ளோம். இந்த பரிசுகள், கேடயங்கள் அனைத்தும் மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றி தனி மனித இடை வெளியுடன் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்க உள்ளோம். இதுவரை ஆதரவு அளித்து வரும் அழகு அரூர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.

*அழகு அரூர் காப்போம்*
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்