Title of the document
e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி ?


Website Link : e-Learn.tnschools.gov.in

 நமது தமிழக பள்ளிக்கல்வித்துறை  www.e-learn.tnschools.gov.in என்ற  புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 நமது தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இணையவழிக் கல்வி பயில்வதற்காக தமிழக அரசானது புதிய இணையதளத்தை அதாவது www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.. இது   மாணவர்கள் வந்து வீட்டில் இருந்தே படிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது..

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்பட்டுள்ளது .. இதனை போக்குவதற்காக பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது அதே போல தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை  புதிய இணையதளத்தை www.e-learn.tnschools.gov.in உருவாக்கி அதனை வெளியிட்டுள்ளது..

 அந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலான பாடங்களை எளிமையான முறையில் கற்கலாம்.. வகுப்பு வாரியாக வீடியோ பாடல்கள் மற்றும்  யூடியூப் சேனல்கள்  இணைப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது..

 இதுமட்டுமல்லாமல் நீட் தேர்வுக்கான வீடியோ பயிற்சியும் இதிலே இணைக்கப் பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக இந்த பயனுள்ள இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது..

 இந்த கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த இணையதளத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுடைய  கற்றல் திறனில் முன்னேற்றமடைய உதவுமாறு  பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொள்கிறது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post