![]() |
Add caption |
இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது. இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறினார். ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம் என தெரிவித்துள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment