Title of the document

9, 11ம் வகுப்புக்கு ஆன்லைன் தேர்வு; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., யோசனை 

 


ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு நடத்தி, தேர்ச்சியை இறுதி செய்யுமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு பிரச்னையால், சி.பி.எஸ்.இ.,யில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் நிலுவையில் இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவிலான தேர்வு, அகமதிப்பீடு மற்றும் பள்ளி செயல்பாடுகள் அடிப்படையில், தேர்ச்சி வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவானதை அடுத்து, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ., இணைப்பில் செயல்படும் பள்ளிகள், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவில் தேர்வு நடத்த முடியாவிட்டால், ஆன்லைனில் தேர்வை நடத்தி, மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post