
பிளஸ் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( ஜூலை 31 ) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு இணயத்தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணிக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி பிறகு அறிவிக்கப்படும்.
Post a Comment