Title of the document
Screenshot_2020-06-03-13-35-04-50


BOX QUESTIONS

9 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்

7. பொருளாதார உயிரியல்

1. உலகம் முழுவதும் 10 மில்லியன் டன் எடைக்கும் அதிகமான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன .

2. கொய்யா , விழுதிப்பழம் ( லிட்சி ) மற்றும் மாம்பழம் ஆகியவற்றை பெரிய அளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது . சப்போட்டாப்பழ உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது .

3. சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் , காய்கறிகளை உற்பத்தி செய்துவருகிறது . * உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காய் உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதல் இடத்திலும் , கத்தரி , முட்டைக்கோஸ் , பட்டாணி , வெங்காயம் , காலிஃபிளவர் மற்றும் தக்காளி உற்பத்தயில் இரண்டாவது இடத்திலும் உள்ளது .

4. " உழவன் செயலி " -தமிழ்நாடு அரசு உழவன் ( விவசாயி ) செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது . இதன் மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள் , விவசாய உபகரனங்கள் , பயிர்க் காப்பீட்டுத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றிய தகவல்களைப் பெறமுடியும் .

5. பிரதமந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - இது இந்திய நடுவன் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும் . இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும் , பயிர்க் காப்பீடும் வழங்குகின்றது .
இது 2016 ஆம் ஆம் நாள் அறிமுகப் படுத்தப்பட்டது . உதிரிப்பூக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன . இது இந்தியாவில் 30 % வளர்ச்சிவீதத்தை அடைந்துள்ளது . இது தோராயமாக 10,000 கோடி ரூபாய் வருவாய்தரும் வணிகத்தினை உருவாக்குகின்றது .

7. உயிரி உரத்திட்டம் - இத்திட்டம் தமிழ்நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்துப்பட்டது . இயற்கை விவசாயத்தை முறையாக நிர்வகிப்பதும் , மன் வளத்தை அதிகரிப்பதற்கு உதவி செய்வதும் இதன் நோக்கமாகும் . 3. மருத்துவத்தின் தந்தைகள்
ஆயுர்வேதம் - சரஹா சம்கிதா
யோகா - பதஞ்சலி
யுனானி - கிப்போகிரேட்ஸ் ( புக்ராத்) சித்தா - அகஸ்தியர்
ஹோமியோபதி - சாமுவேல் ஹன்மேன்

9. கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக " லிங்லி " என அழைக்கப்படுகின்றது . இது ஸ்டீராய்டு போன்ற டெர்பினாய்டுகளை உருவாக்குகின்றது . லிங்லி மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நன்மைகளை வழங்குகின்றது . உடலுக்குத் தேவையான உயிர்வளியை அதிகப்படுத்துவதுடன் ஆற்றலையும் அளிக்கிறது . அதிக ஆற்றலையும் , வீரியத்தையும் அளிக்கிறது . மூளைத்திறனை அதிகரிக்கின்றது . நல்ல உறக்கத்தை தருவதோடு , இரத்த ஓட்டத்தையும் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது .

10 , அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் ( CSIR ) , தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ( NBRI ) மற்றும் மருத்துவ , நறுமனத் தாவரங் களுக்கான மத்திய நிறுவனம் ( CIMAP ) ஆகியவை கூட்டாக இனைந்து BGR34 எனப்படும் நீரழிவு ஆயுர்வேத தடுப்பு மருந்தை ( BGR - Blood Glucose Regulator ) அறிமுகப்படுத்தியுள்ளன .

11. இளம் பென் கன்றுக்குட்டியானது இளம்பசு ( தன்னுடைய முதல் குட்டியைப் பெரும் வரை ) என்றும் , இளம் ஆன் கன்றானது கிடாரி என்றும் அழைக்கப்படுகின்றது .

12. ஹோல்ஸ்டீய்ன் இன மாடு பிற இன மாடுகளைவிட அதிக அளவு பாலினை அளிக்கிறது .

13. பசுவின் பாலிலுள்ள ஊட்டச்சத்துகளின் தகவல் பாலிலுள்ள சத்துக்களின் பெயர் 100 மில்லி லிட்டருக்கு சராசரி அளவு ஆற்றல் 200 கிலோ மொத்த புரதம் 3.4 கிராம் கேசின் 0.7 கிராம் மொத்த கொழுப்பு 0.4 கிராம் செறிவூட்டப்பட்ட கொழுப்பு 3.4 கிராம் மொத்த கார்போஹைட்ரேட் 2.3 கிராம் சோடியம் 44 மில்லி கிராம் கால்சியம் | 123 மில்லி கிராம்

14 . முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்னை வளர்ச்சிக் கழகமானது ( NDDB ) உருவாக்கப்பட்டது . எனவே , அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும் , வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்படுகிறார் .

15. NDDB என்ற அமைப்பானது , உலகின் மிகப்பெரிய பால் பண்னை மேம்பாட்டுத் திட்டமான Operation Flood என்ற திட்டத்தை செயல்படுத்தியது .

16. பஞ்சகவ்யா ( இந்தியில் பஞ்சம் - ஐந்து , கவ்யா - பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ) என்பது கரிமப் பொருளால் ஆன உயிர் உரமாகும் . இந்த உரமானது தாவரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து , வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது . இதில் உள்ள முக்கியமான பொருட்களாவன : மாட்டுச் சாணம் ( 25 % ) ,  மாட்டு கோமியம் ( 25 % ) , பால் ( 15 % ) , தயிர் ( 10 % ) , நெய் ( 5 % ) வாழைப் பழம் ( 5 % ) , இளநீர் ( 5 % ) மற்றும் வெல்லம் ( 10 % ) ,

17. இந்தியாவில் மீன் உற்பத்தி நீர்வாழ் உயிரிவளர்ப்பு உற்பத்தி - தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2 வது இடம் . மொத்த மீன் உற்பத்தி உலகளவில் 7 வது இடம் கடல் வாழ் மீன் உற்பத்தி - உலகளவில் 10 வது இடம்.

18. 1947 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் இந்திய அரசாங்கத்தால் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது ( The Cental Marine Fisheries Research Institutie - CMPRI ) நிறுவப்பட்டது .

19. சென்னையை தலைமையிடாகக் கொண்டு 1987 - ம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது ( CIBA - Central Institute of Brackish Water aquaculature ) நிறுவப்பட்டது .

20. பெனெய்டு இறால்கள் கூனி இறால்கள் என அழைக்கப்படுகின்றன.
 ( எ.கா. பினேயாஸ் இண்டிகஸ் ) .

21. பெனெய்டு அல்லாத இறால்கள் இறால்கள் என்றே அழைக்கப்படுகின்றன ( எ.கா. பலேமோன் சிற்றினங்கள் , மேக்ரோபிராகியம் சிற்றினங்கள் ) .

22. மண் புழுக்களிலிருந்து சுரக்கப்படும் கோழையானது , நைட்ரஜனைக் கொண்டுள்ளது . இது தாவரங்களுக்கான சிறந்த ஊட்டச்சத்தாகும் .

23. மண்புழு வளர்ப்பின்போது , நீரானது மேற்பரப்பின் மீது தெளிக்கப்படுகிறது . மிகுதியான நீரானது , மண்புழுக்களின் எச்சத்துடன் கலந்து கீழே வடிகின்றது . இதற்கு மண்புழு ரசம் என்று பெயர் .
இது பெரும் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களுடன் நொதிகளையும் கொண்ட , தாவர வளர்ச்சியை ஒழுங்குபடுத்தக்கூடிய திரவமாகும் .

24. தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது 50 முதல் 100 மலர்களிடம் தேனை சேகரிக்கும் . சராசரியாக ஒரு தேனீ தனது வாழ்நாளில் 4 தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கிறது . ஒரு கிலோ கிராம் தேனில் 3200 கலோரி ஆற்றல் உள்ளது . இது ஆற்றல் மிகுந்த உணவாகும் .

25. தேனீ வளர்ப்பு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் முக்கியமானப் பணிகளில் ஒன்றாகும் .


🥦🧚🏼‍♂️ɢʀᴏᴜᴘ1&ɢʀᴏᴜᴘ2&ɢʀᴏᴜᴘ4 Model Question and Answer!

🧚🏼‍♂️Click here to view

🥦🧚🏼‍♂️TNPSC தமிழ் இலக்கணம், இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட அனைத்தும்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post