Important Links

Title of the document 95 43 43 43 97 - TNPSC Exam 2021 - Free Coaching Class Contact : 9543434397


ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு மெசேஜ் வந்த போது இவ்வளவு பிரச்சனைகள எதிர்கொள்ளுவோம்னு எதிர்பாக்கலை.
முதல் சிக்கல் எங்களிடம்  கணிணி, சொந்த உபயோக லாப்டாப் போன்ற விசயங்கள் இல்லை. செல்போன்கள் மட்டுமே. அதை வச்சு சமாளிக்கலாம்னு ஒரு கணக்கு போட்டோம். ஜியோ இருக்க பயமேன்னு அம்பானிய வேற நம்புனோம்.
டைம் டேபிள் பாத்ததும் தல சுத்திருச்சு. காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள்.
1. நாங்கள் வேலைக்கு எப்படி போவது?
2. திடீரென இருபதாயிரம் செலவு செய்து லாப்டாப் வாங்கணுமா? அதுவும் இருவருக்கெனில் என்ன செய்ய? எத்தனை நாட்கள் எனும் தெளிவும் இல்லை. இருந்தால் வாடகைக்கு வாங்கலாம்.
3. இத்தனை செய்தாலும் பிள்ளைகளுக்கு கனெக்ட் பண்ண தெரியுமா? குறிப்பாக சின்னவளுக்கு. எட்டு வயதுதான்.
4. கூடவே இருப்பது சாத்தியாமா?
5. இத்தனை எலக்ட்ரானிக் டிவைசுகளை சார்ஜர்களுடன் குழந்தைகளை நம்பி விட்டுவிட்டு எப்படி தைரியமாக வேலைக்கு செல்வது.
இதெல்லாம் முதல்கட்ட சிக்கலாக இருந்தது. மிகுந்த குழப்பநிலை
சரி விதிவழி வாழ்க்கை என ஒரு டேப் வாங்கினோம். 1 ஜபி ராம் கொண்ட செகண்ட்ஹாண்ட் டேப் வாங்கினோம். அதன் வேகம் ஆகா..சொல்லி மாளாது. சரி வாங்குனோம். புதுசு எங்கும் ஸ்டாக் இல்லை என ரிச்சி தெரு கைவிரித்தது.
அடுத்தது ஒரு புளூடூத் ஹெட்செட் வாங்கினோம்.
அவரோட அலுவல்களுக்காக அவர் வைத்திருக்கும் லாப்டாப்பையும் இந்த டேபையும் வைத்து போன் நெட்டில் சமாளிக்கலாம் என பைத்தியக்காரத்தனாமகத் திட்டம் போட்டோம்.
காலை எட்டு மணிக்கு கனெக்ட் செய்தால், கூகுள் கிளாசுரூம் சிக்கல்கள் . அதாவது மகனின் ஐடி எல்லாவற்றிலும் ஓபன் ஆகும். மகளுடையது இரண்டாவது டிவைசில் ஓபன் ஆகாது. பெண்கள் பள்ளி என்ற பாதுகாப்பு செட்டிங்கா என தெரியவில்லை. நேரத்திற்கு மீட்டிங்கில் கனெக்ட் ஆகாது. பள்ளி வாட்சப் குழுவில் அனைத்து தாய்மார்களும் தந்தைமர்களும் லபோ திபோ என அடித்துக்கொள்வார்கள்.
அதிலும் டைம் டேபிள் பார்த்து பார்த்து சரியான கிளாசு கோடு கொடுத்து உள்ளே செல்லவேண்டும். எனக்கே மூச்சுமுட்டும்போது பிள்ளைகள் தனியாக என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
அடுத்து நெட் சிக்கல். ஒரு மணிநேரத்தில் இருவருக்கும் சேர்ந்து இரு ஜிபி காலி. ஜியோவில் போட்ட நெட்பேக் சல்சல்லென தீரும். ஏர்டெல் சிறிது தாக்கு பிடிக்கும். ஆக அவரது இருஜிபி என்னுடைய மூன்று ஜிபி என ஓட்டுகிறோம்.
பிராண்ட்பேண்ட் கனெக்சனுக்கு வருந்தி வருந்தி அழைத்தும் யாரும் இப்போவரை வரவில்லை.
மீட்டிங் நடக்க நடக்க சார்ஜ் தீரும், ஹெட்செட் கேக்காது, திரையில் ஏதேனும் பாப்அப் தோன்றும், இவர்கள் கை கால் பட்டு ஏதாவது ஆகும். இவற்றை சரி செய்யணும். கிட்டத்திட்ட நானும் அவர்களோடேயே அமர்ந்தாகணும்.
அத்தனை ஏராளமான சிக்கலுமாக சேர்ந்து கடும் மன உளைச்சல் தந்த்து.
குறிப்பாக எனக்கு. மாற்றி மாற்றி டிவைசுகளை கனெக்ட் செய்வதும், சார்ஜ் செய்வதும், சிக்கல்களை டிரபிள்சூட் செய்வதுமாக மூச்சு திணறியது. இதற்கிடையில் வீட்டுப்பணிகள்.
கடந்தவாரம் ஆபிசுக்கு போயே தீரவேண்டிய தினம். லீவெல்லாம் காலி.  மகனுக்கு படித்து படித்து பாடமெடுத்து அவளையும் கவனி என்று சொல்லி கனெக்சன்களை விளக்கினோம்.
ஆபீசில் அமர்ந்த ஐந்தாவது நிமிசத்துக்கு போன் வருகிறது. இது கனெக்ட் ஆகல அது இது என.. நீ அட்டண்ட் பண்ணவே வேணாம் விடு என்றுவிட்டு வேலையைப்பார்த்தோம். மாலை பள்ளி வாட்சப்குழுவில்  பகிரப்பட்ட வீட்டுப்பாடங்கள், நடத்தப்பட்ட பாடங்கள் மீண்டும் மனச்சுமையை கூட்டின.
இனி நாளை முதல் இருவருக்கும் அலுவலகம். என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை. இதெல்லாம் பிள்ளைகளுக்கு சிறுவர்களானதால் தெரியவில்லை. வளர்ந்த பிள்ளைகள் எவ்வளவு உளைச்சலாவார்கள்.
எவ்வளவு பேரால் உடனே சில ஆயிரங்களை செலவு செய்ய இயலும்.?
இதில் பாடமெடுக்கும் ஆசிரியிர்கள் பாடு படு கொடுமை. அவர்களால் அனைத்து பிள்ளைகளையும் ஸ்கிரீனில் பார்க்க இயலவில்லை. ஏதோ கடமைக்கு நடத்துகிறார்கள். அவர்கள் சூழலும் இதுவே. போதிய வெளிச்சம் இல்லை.  லைட்டை போட்டு போட்டு அனைவர் தலைக்குப்பின்னும் ஒளிவட்டம். ஆசிரயர்களின் வீட்டுக் கொடியில் துணி காய்வது, அவர்கள் கணவர்கள் குளித்துவிட்டு லாப்டாப்பின் திரையில் நகர்வது அதை இவர்கள் பகடி்செய்வது என பரிதாபங்கள்.
தோராயமாக நாலு மணிநேரம் நடக்கிறது. உடலென்ன ஆகும்? கண் என்னவாகும்? நாலுமணிநேரம்  இன்டெர்நெட் வைபை என அமர்ந்தால் கதிர்வீச்சு பாதிப்பு வராதா? சார்ஜர்களை கனெக்ட் செய்து பயன்படுத்த பயமாக இருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி பிள்ளைகள் வெளியே வேடிக்கை, குறும்பு என கழிக்கிறார்கள். எதுவும் கவனிப்பதில்லை. அவர்கள் கவனம் எளிதில் சிதறுகிறது.
இரு பிள்ளைகள் வீட்டில் ஒருவர் பேசுவது மற்றவருக்கு தொந்தரவு.
நாங்கள் யாரும் வாய்திறவாமல் ஊமைச்சாமியாராய் வலம் வருகின்றோம். டிவியும் மியூட்டில். மீறி சத்தம் வந்தால் டீச்சரே எங்கள் வாயையும் சேர்த்து மூடுகிறார்கள்.
எல்லா கொடுமைக்கும் சேர்த்து ஐம்பதாயிரம் பீசு.
பிள்ளைகள் சொல்வது அட்டெண்டென்சும் பை மேமும் மட்டும்தான்.
இதெல்லாம் தோரயமாக பிள்ளைகளை பாடங்களை மறவாமல் இருக்கச் செய்யலாம்
 அவ்வளவே. எது ஒன்றையும் கற்பிக்கவோ விளங்கவைக்கவோ முடியாது.
இந்திய குடும்பசூழல், பொருளாதரம், வீடு என எதுவும் இணைய வழி கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் நிச்சயம் உதவாது. ஒரு சிறு விசயத்தையும் எபுக்டிவாக அவர்களிடம் கொண்டு சேர்க்க இயலாது.
நானெல்லாம் போன் எடுத்தாலே தப்பு தப்பு என வளர்த்திவைத்திருக்கிறேன். அந்த சூழல் அவர்களுக்கு முற்றிலும் புதிது. ஒன்ற இயலாது.
லட்சக்கணக்கில் பணம் வேஸ்ட்.
நேரம் வேஸ்ட்
மன உளைச்சல்.
(ஏன் அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று வராதீர்கள். சோர்வாக இருக்கிறது பேசி பேசி. இப்போதய சூழலை எழுதிருக்கேன்)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post
KALVINEWS | KALVI NEWS | KALVISEITHI | KALVISOLAI | PALLIKALVI NEWS