Title of the document
01.01.2004 முதல் 28.10.2009 வரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் GPF திட்டத்திற்கு மாற்றம் என்ற செய்தி அனைவராலும்  பகிரப்பட்டு வருகிறது.* 

அது சார்ந்த சில விளக்கங்கள்.
*மத்திய அரசின் அரசாணை  11.06.2020 ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இது  அனைவருக்கும் பொருந்தாது.*
01.01.2004 க்கு முன் பணியில் சேர்ந்து மத்திய, மாநில, பொதுத்துறை பணியாளர்கள்
பணித்துறப்பு செய்தவர்களில்,
பின்னர்  அரசின் பிறதுறைகளில் மீண்டும்
01.01.2004 க்கு பிறகு புதிய ஓய்வூதிய  திட்டத்தில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்களின் (Representation) வேண்டுகோளை ஏற்று 28.10.2009 ல் மத்திய அரசின் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதன்படி 01.01.2004 முன்பு பணியாற்றிய பணிக்காலத்தினையும் கணக்கிட்டு பழைய ஓய்வூதிய விதிகளின்படி (CCS Pension Rule 1972) ஓய்வூதிய பலன்கள் கிடைக்க ஓய்வு பெற்றவர்களுக்கு ஆணையிடப்பட்டது.
இதேநிலையில் 01.01.2004 க்கு முன் பணியில் சேர்ந்து மத்திய, மாநில, பொதுத்துறை பணியாளர்கள்
பணித்துறப்பு செய்தவர்களில், தற்போது பணியில் உள்ளவர்களுக்கு
 *(01.01.2004 முதல் 28.10.2009 வரை பணியேற்றவர்களுக்கு மட்டும்)*
பழைய GPF முறைக்கு மாற்றம் செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணை *அனைவருக்கும் பொருந்தாது .*
*இதுநாள்வரை தமிழக அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராததால் இந்த அறிவிப்பாணைக்கும்  தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.*
- திண்டுக்கல் எங்கெல்ஸ். 


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post