Title of the document




ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்ப்டடிருக்க வேண்டும். ஊரடங்கு காரணமா இந்தமுறை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஆன்லைன் வகுப்புகளை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அப்படி ஆன்லைன் வகுப்பெடுத்து கேரளாவில் ஒரே நாளில் பிரபலமானவர்தான் ஸ்வேதா டீச்சர்.

கேரளா மட்டுமல்ல சமூக ஊடகங்கள் முழுவதும் ஸ்வேதா டீச்சர் பற்றிய பதிவுகள்தான் நிரம்பியிருக்கின்றன. கண்களை அகல விரித்து, முகபாவனைகளை மாற்றி ஆடி அசைந்து அவர் கதை சொல்லி வகுப்பெடுக்கும் அழகே தனிதான்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் Chombala LP பள்ளியில் 1-ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் சாய் ஸ்வேதா டீச்சரின் வகுப்பிற்காக மாணவர்கள் காலை 8:30 மணிக்கெல்லாம் டிவி அல்லது கணினி முன்பே ஆஜராகி விடுகின்றனர்.

மாணவர்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களும் கூட ஸ்வேதா டீச்சரின் கதை கேட்க தயக்கம் காட்டுவதில்லை. கேரளா அரசின் KITE VICTOR CHANNEL வாயிலாக கடந்த 1-ஆம் தேதி முதல் பாடம் நடத்தி வரும், கதைகள் சொல்லி வரும் ஸ்வேதா டீச்சருக்கு கேரளா மட்டுமல்ல தமிழகத்திலும் ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டே வருகிறது.



ஸ்வேதா டீச்சர்



ஸ்வேதா டீச்சரின் கணவர் வளைகுடா நாட்டில் பணியாற்றி வருகிறார். ஆன் லைன் வகுப்பில் மட்டுமல்ல.டிக் டோக்கிலும் ஸ்வேதா டீச்சர் ஒரு ரவுண்டு வந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.ஸ்வேதா டீச்சரின் வகுப்பை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும், நமக்கும் இப்படி ஒரு டீச்சர் வாய்க்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post