பயமில்லாமல் பரீட்சைக்கு வாங்க! மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வித்துறை

Join Our KalviNews Telegram Group - Click Here
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அச்சமின்றி தேர்வெழுதலாம்'' என, கலெக்டர் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, 16ம் தேதியும், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு, 18ம் தேதியும் நடக்க உள்ளது.பிளஸ் 1 தேர்வில், 25 ஆயிரத்து 911 மாணவர்களும், 181 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 349 பள்ளிகளில் பயிலும், 29 ஆயிரத்து 746 மாணவர்கள், 856 தனித்தேர்வர்கள் சேர்த்து, 30 ஆயிரத்து 602 பேர் எழுதுகின்றனர்.தேர்வுக்குழு கூட்டம், கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகர போலீஸ் கமிஷனர், தாராபுரம் திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர், மின்வாரிய செயற்பொறியாளர், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஆகியோர் அடங்கிய தேர்வு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது;மாவட்டத்தில், 6 இடங்களில் வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை கண்காணிப்பாளர்களாக, 349 தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்களாக, 349 பேர், அறை கண்காணிப்பாளர்களாக, 2,985 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மையங்களை கண்காணிக்க, 200 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள், எந்நேரத்திலும் மையங்களுக்கு திடீர் 'விசிட்' செய்வர். தேர்வு மையங்களில் அனைத்து பாதுகாப்பு நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.பயம் வேண்டாம்கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''மாணவர்கள் பயின்ற பள்ளியிலே தேர்வு எழுதலாம்.

வகுப்பறைக்கு, 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு மையங்கள் காலை, மாலை, இருவேளையும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். மாணவர்களுக்கு முக கவசம், கை கழுவ, 'சானிடைசர்' வழங்கப்படும். பயமின்றி, மாணவர்கள் தேர்வு எழுத வரலாம்,'' என்றார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்